கன்னியாகுமரி : மூதாட்டியை மீன் வியாபாரம் செய்யவிடாமல் தடுக்கும் இளைஞர்!

Kanyakumari-A-young-man-stops-an-old-woman-from-doing-fish-trading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு கொடுக்க வந்த ஆரல்வாய்மொழியில் மீன் கடை நடத்தி வரும் தானம்மாள் என்ற மூதாட்டி திடீரென்று தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் அடிக்கடி, நடைபாதையில், தான் நடத்தி வரும் மீன் கடையை சேதப்படுத்தி வருகிறார். இதனால், எனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து,ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். காவலர்கள் மூதாட்டிக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.