நாகர்கோவில்: கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது வாகனம் பறிமுதல்

nagercoil-three-ganja-dealers-arrested-vehicle-seized

நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 1கிலோ 400 கிராம்.கஞ்சா. மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று 2 சக்கர. வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகர்கோவில், இளங்கடை, சாஸ்தா நகர், பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் விஷ்ணு(32), கிருஷ்ணன்கோவில் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (23), சுசீந்திரம், ஆசிரமம் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார்(33) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.