
நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில் புதிய விரிவான மினி பேருந்து சேவையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கங்காடியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள், கலந்துகொண்டு, மினி பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து துவக்கி வைத்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார் , தாரகை கத்பர்ட் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், உதவி ஆட்சியர் ராகுல் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சக்திவேல்.சுரேஷ் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர்.மேரி பிரின்சிலதா, மற்றும் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்