
அபராதம் விதிப்பது நமது நோக்கம் அல்ல, போக்குவரத்து விதி மீறலின் விளைவுகளை மக்களை உணரச் செய்வதே நமது வெற்றி என போக்குவரத்து போலீசாருக்கு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் அறிவுரை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான மனம் திறந்து நிகழ்ச்சியின் போது பல போலீசார் விரிசுருள் சிறை நோய் (varicose veins) இன் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் போக்குவரத்து காவலர்கள் இந்த நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இதற்கு அவர்கள் பணியில் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதனால் ஏற்படுகிறது.
இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான 20 பேரிகேட் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் இன்று 18-06-25 மாவட்ட ஆயுதப்படையில் வைத்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
▫️ போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் போது பொதுமக்களிடம் மரியாதையுடன் அணுக வேண்டும்
▫️ அபராதம் விதிப்பது நமது நோக்கமல்ல, மக்களை உணரச் செய்வதே நமது வெற்றி எனவும் பேசினார்
இந்நிகழ்வில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார் IPS, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆய்வாளர்கள் திரு. அருண், திரு. வில்லியம் பெஞ்சமின் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.