
சமூக பொதுநல இயக்க திருவட்டார் ஒன்றிய செயற்குழு கூட்டம் திற்பரப்பு பகுதியில் ஒன்றிய தலைவர் ரெங்கசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர் மரியசெல்வன், மனநல பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் அருள்ராஜ் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் சங்க பொது செயலாளர் சங்கரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் டைட்டஸ், செண்பை , சிவகுமார், மரிய சுலோசனா, சாந்தா, ராபர்ட், ஷாஜி, அகஸ்டின் தாஸ், புஷ்பலதா, மேரி, ஷோபா, மகிலர, தங்க ஜாய், கிறிஸ்டி விமலா, ரத்தின பாய், அகிலா,லலிதா, வசந்தா, அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திற்பரப்பு -திருவட்டார் சாலையில் கீழ ஆற்றூர் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, உடனடியாக மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். திற்பரப்பில் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.