நெல்லை சங்கர் நகரிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் டி.என்.பி.எல். அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. எனவே, அணிகள் திருநெல்வேலியின் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் , திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் தனது சக வீரர்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரையில் ஆபத்தான இடத்தில் குளித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தான் நண்பர்களுடன் குளிக்கும் வீடியோவை அப்லோடு செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், தடை செய்யப்பட்ட பகுதியில் நண்பர்களுடன் குளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பரளியாற்றின் அடுக்கடுக்கான பாறைகளில் நீர்வீழ்ச்சி போல பாயும் இந்த பகுதி,ஆபத்தானதாகும். உள்ளூர் மக்கள் கூட குளிக்க தயங்கும் இடம் இது. அஸ்வின் இங்கு குளித்த வீடியோவைப் பார்த்த சுற்றுலா பயணிகளும், இந்த பகுதிக்கு குளிக்க வருவதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.











.jpg)
