கன்னியாகுமரி : வீட்டோடு, மாப்பிள்ளை என்பதால் மரியாதை குறைவு... மனைவிக்கு நடந்த சோகம்

husband-murder-wife-in-kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (வயது 46).தொழிலாளியான இவருடைய மனைவி பபிதா நித்ய செல்வி (39). இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் என்ற மகனும், 7 வயதில் டிக்ஸ்மெரின் என்ற மகனும் உள்ளனர். பென்குரூஸ் மன நிலை சரியில்லாதவர் பள்ளியில் தங்கி படித்து வந்தான். இந்தநிலையில் டிக்ஸ்மெரின் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளான். இதனால் நேற்று டார்வினும், பபிதா நித்ய செல்வி ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று காலையில் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில், மனைவியை கழுத்தை நெறித்து டார்வின் கொன்றுள்ளார். பின்னர், சடலத்துடன் இரவு வரை வீட்டிலேயே ஒரு வித பதற்றத்துடன் இருந்துள்ளார்.

இரவு நேரத்தில், மனைவியின் சடலத்தை எடுத்து சென்று வனப்பகுதியில் போட்டு விட திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, டார்வின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், கதவு உள்பக்கம் பூட்டியிருந்தால், அக்கம் பக்கத்தினர் நேற்றிரவு கதவை தட்டினர். அப்போது, கதவை டார்வின் திறந்துள்ளார். உள்ளே, பபிதா நித்ய செல்வி சடலமாக கிடந்ததை கண்டு மக்கள் அதிர்ந்தனர். தொடர்ந்து,கருங்கல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பபிதா நித்ய செல்வியின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டார்வினை பிடித்து போலீசார் விசாரித்த போது, வீட்டோடு மாப்பிள்ளையாக வந்ததால், மனைவி தனக்கு மரியாதை குறைவாக நடத்தினார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார்.