
கன்னியாகுமரி புதிதாக திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரிக்கும் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்த நிதின் ராஜ் என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 10 ஆண்டுகள் காதலித்து இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது . பெண் வீட்டார் வரதட்சணையாக 7 லட்சம் 50 சவரன் தங்க நகை இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை , இரு சக்கர வாகனம் , ஒரு வீடு ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில், நேற்று மதியம் திடீரென ஜெபிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
ஜெபிலா மேரியின் உறவினர்கள் அவர் தற்கொலை செய்யவில்லை வரதட்சணைக்காக அடித்துக் கொல்லப்பட்டார். எனவே நிதின்ராஜ் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.