
அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தடகளப் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலர் கிருஷ்ணரேகாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
உலகளவிலான காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தடகள போட்டி கடந்த ஜுன் 27ம் தேதி அமெரிக்காவில் அலபாமா மாகாணத்திருள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை வென்றார். இதையடுத்து, காவலர் கிருஷ்ணரேகா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.