ரியல்மீ 2 ப்ரோ அதிரடி விலை குறைப்பு

Realme 2 Pro Price in India Cut, Now Starts at Rs. 12,990

by SAM ASIR, Feb 16, 2019, 10:33 AM IST

ரியல்மீ 2 ப்ரோ போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வந்தன.

தற்போது ரியல் 2 ப்ரோ போன்களில் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி இயக்க வேகம் கொண்ட வகைகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவு மூலமாக ரியல்மீ நிறுவனம் இந்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. 8 ஜிபி இயக்கவேகம் கொண்ட போனுக்கான விலைகுறைப்பு பற்றி எந்த தகவலும் இல்லை.

ரியல்மீ 2 ப்ரோ போன்களின் விலையில் 1,000 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம்; 1080X2340 பிக்ஸல் தரம் கொண்ட எஃப்ஹெச்டி வகை

இயக்கவேகம்: 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி RAM என மூன்று வகை

சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவகை (மைக்ரோஎஸ்டி மூலம் 256 ஜிபியாக அதிகரிக்கலாம்)

முன்பக்க காமிரா: 16 எம்பி தரம் கொண்டது

பின்பக்க காமிரா: 16 எம்பி மற்றும் 2 எம்பி தரம் கொண்ட இரண்டு காமிராக்கள்

முன்பக்க மற்றும் பின்பக்க காமிராக்கள் ஏஆர் ஸ்டிக்கர் வசதி கொண்டவை

பேட்டரி: 3500 mAh ஆற்றல்

எடை:174 கிராம்

பிராசஸர்: ஸ்நாப்டிராகன் 660 ஏஐஇ ஆக்டோகோர்

இவை தவிர யூஎஸ்பி ஓடிஜி, வைஃபை 802.11 எசி, புளூடூத், 4ஜி VoLTE, ஜிபிஎஸ் வசதிகள் கொண்டது.

விலை: 4 ஜிபி RAM / 64 ஜிபி ரியல்மீ 2 ப்ரோ 12,990 ரூபாய்க்கும் 6 ஜிபி RAM / 64 ஜிபி போன் 13,990 ரூபாய்க்கும் கிடைக்கும்.

You'r reading ரியல்மீ 2 ப்ரோ அதிரடி விலை குறைப்பு Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை