ஜில் ஜில் ஜிகிர்தண்டா..

by Isaivaani, Jan 24, 2018, 22:53 PM IST

கோடைக்காலம் நெருங்கிட்டு வருது.. வெயிலுக்கு இதமா குளு குளுனு ஜிகர்தனடா குடிச்சா எப்படி இருக்கும்.. சரி ஜிகர்தண்டா எப்படி செய்றது..

தேவையான பொருட்கள் :

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
சைனா கிராஸ்(China Grass) - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1
பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பால் அரைலிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

* ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.

* அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

* பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.

* அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.

* ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.

You'r reading ஜில் ஜில் ஜிகிர்தண்டா.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை