வித்தியாசமாக செய்யலாம் ரவா குலாப் ஜாமூன் ரெசிபி

Yummy Rava Jamun Rrecipe

by Isaivaani, Mar 16, 2019, 00:21 AM IST

வித்தியாசமாக ரவையில் குலாப் ஜாமூன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ரவா - 100 கிராம்

பால் - 375 மி.லி.,

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 200 கிராம்

தண்ணீர் - ஒன்றரை கப்

எலுமிச்சைப்பழ சாறு - சிறு துளி

ஏலக்காய் - 3

எண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் ரவை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.

பின்னர், ரவையுடன் பால், நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

ரவை பாலுடன் சேர்ந்து நன்றாக கெட்டியானதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறியதும் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இதன்பின்னர், ரவை கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து விரிசல் வராதபடி கையின் நெய் தடவி உருண்டை செய்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயாரிக்கவும். இடையே, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அத்துடன், ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

ஒரு வாணலியில் பொறிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் ரவை உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

ரவை உருண்டை ஆறியதும், மிதமான சூடில் இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான ரவா குலாப் ஜாமூன் ரெடி..!

You'r reading வித்தியாசமாக செய்யலாம் ரவா குலாப் ஜாமூன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை