குழந்தைகள் விரும்பும் பிரட் பிட்சா ரெசிபி

Bread Pizza Recipe

by Isaivaani, May 10, 2019, 22:11 PM IST

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிரட் பிட்சா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 10

வெங்காயம் - 1

தக்காளி - 1

குடைமிளகாய் - ஒன்று

சிகப்பு குடைமிளகாய் - ஒன்று

கருப்பு மற்றும் பச்சை ஆளிவ் -1

வெண்ணெய்

துருவிய சீஸ்

காய்ந்த மிளகாய் தூள்

தனியா தூள்

செய்முறை:

தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணை ஊற்றி பிரெட் துண்டுகளை ஒருபுறம் மட்டும் சுடவும்.

மறுபுறம் பிட்சா சாஸை தேய்த்து அதன்மீது நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் ஆலிவ் துண்டுகளை போடவும்.

பின் அதன் மீது, துருவிய சீஸ் போடவும், மேலும், சுவை கூட்ட காய்ந்த மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் தூவலாம்.

பின், தோசைக்கல்லில் ஒரு மூடிவைத்து சிறிது நேரம் கழித்து திறந்தால் சுவையான பிரட் பிட்சா தயாராக இருக்கும்.

You'r reading குழந்தைகள் விரும்பும் பிரட் பிட்சா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை