சாப்பிடாமல் இருப்பதில் இவ்வளவு நன்மைகளா?

What are the benefits if you avoid eating food?

by SAM ASIR, Jun 6, 2019, 10:16 AM IST

குறிப்பிட்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறதாம். இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை.


நீரிழிவு நோயால் பாதிப்புற்றவர்களுக்கு விரதம் பெருத்த நன்மையை தருகிறது. நீரிழிவின் வகை 2 பாதிப்புள்ளவர்கள் 10 பேர்களிடம் ஓர் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம் குறுகிய நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட நேரம் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருந்தால் இன்சுலின் தடுப்புத் தன்மை குறைகிறது. அதன் காரணமாக இரத்தத்திலிருந்து சர்க்கரை செல்களுக்கு கடத்தப்படுவது தூண்டப்படுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது.

உடல் நலம் பெறுகிறது:


அழற்சி (inflammation) நீண்ட காலம் பாதித்தால் உடல் நலத்திற்கு பெருத்த கேடுண்டாக்கும். இதயநோய், புற்றுநோய் மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற கொடிய உடல்நல குறைபாடுகளுக்கு இது வழிவகுத்துவிடும். உணவினை தவிர்ப்பது அழற்சியை குறைத்து உடல் நலத்தை அதிகரிக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமான இதயம்.


உலகெங்கும் மக்களின் மரணத்திற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது இதய நோயாகும். முறையான விதத்தில் ஒழுங்காக நோன்பு இருப்பது இதயத்திற்கு நன்மை செய்வதாகவும், இரத்த அழுத்தம் மற்றும் டிரைகிளிசராய்டு அளவுகளை குறைப்பதாகவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


எடை குறைகிறது:


உடல் எடையை குறைக்க விரும்புவோர் குறிப்பிட்ட இடைவெளியின்றி எப்போதாவது உணவினை தவிர்த்தால் நல்ல பலனை பெற இயலும். முறையான விரதம் மற்றும் ஒழுங்கற்ற விரதம் என்ற வகையில் சரியான ஒழுங்கின்றி ஆனால் குறுகிய நேரம் இருக்கின்ற விரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையை குறையச் செய்யும். உடலில் ஆற்றலாகிய கலோரி சேர்வதை தடுப்பதை காட்டிலும் விரதமிருப்பது, தேவையற்ற கொழுப்பினை உடலிலிருந்து விரைவாக நீக்கும்.


நீண்ட ஆயுள்:


விரதமிருப்பது தோற்றம் முதுமையாக மாறுவதை தள்ளிப்போடும். ஆயுளை அதிகரிக்கச் செய்யும். எலிகளை கொண்டு ஓர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட எலிகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் உணவிடப்படாமல் ஆய்வு செய்யப்பட்டது. அப்படி பட்டினி போடப்படும் எலிகள், தொடர்ந்து உணவு உண்ணும் எலிகளைக் காட்டிலும் 83 விழுக்காடு அதிக நாள்கள் உயிர் வாழ்ந்தன. இந்த ஆய்வு இன்னும் மனிதர்களிடம் நடத்தப்படவில்லை.
வயிற்றுப் பிரச்னை தீரும்.


வயிற்றுக்கு பெரிய விடுதலையை கொடுக்கக்கூடியது விரதம். சாப்பிட்டவற்றை செரிமானம் செய்து களைத்துப் போயிருக்கும் வயிற்றுக்கு நாம் நோன்பிருந்தால் ஓய்வு கிடைக்கும். ஆகவே, வயிற்று உபாதைகள் தீரும்.


சாப்பாட்டை தவிர்ப்பதில் சில நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், விரதமிருப்பது அனைவருக்கும் உகந்ததல்ல. குறிப்பாக சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு வியாதி உள்ளவர்கள் உணவினை தவிர்த்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென குறைந்து ஆபத்தை விளைவிக்கக்கூடும். சாப்பாட்டை தவிர்ப்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்னரே முடிவெடுங்கள். ஒருநாளுக்கு மேற்பட்ட நேரம் (24 மணி) சாப்பிடாமல் இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருக்கும்போது போதிய ஓய்வெடுப்பதோடு உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் கவனமாக இருத்தல் வேண்டும்.

You'r reading சாப்பிடாமல் இருப்பதில் இவ்வளவு நன்மைகளா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை