புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...

WHO guidelines to new age parent on parenting

by SAM ASIR, Aug 9, 2019, 13:31 PM IST

ஐந்து ஆண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. சுகாதாரத்தை குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அளிக்கக்கூடிய உலகளாவிய நிறுவனம் அது. விரிவான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி செய்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலே அவர்கள் பரிந்துரைகளை செய்கிறார்கள்.


உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் ஆலோசனை அளிக்க குடும்பத்தோடு முதியவர்கள் இல்லாத இக்காலகட்டத்தில் பெற்றோர் கண்டிப்பாய் கவனத்தில் கொள்ளத்தக்கவை. வாழ்வியல் முறை மாறி வருவதால் குழந்தைகளின் நலன் கருதி இவற்றை கடைபிடிக்க வேண்டும்.


முக்கிய குறிப்புகள்:
குழந்தைகள் போதிய நேரம், ஆழ்ந்து உறங்குவதில்லை
குழந்தைகள் போதிய நேரம் விளையாடுவதில்லை; நடமாடுவதில்லை
குழந்தைகள் தொலைக்காட்சி, கணினி, மொபைல் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்க்கின்றனர்.


குழந்தை ஓடியாடினால் அதை பின் தொடர்ந்து பிடிக்கும் ஆற்றல், பொறுமை இன்றைய பெற்றோருக்கு இருப்பதில்லை. ஆகவே, குழந்தைகளை தள்ளுவண்டியில் (stroller) வைப்பது எளிது என்று நினைக்கின்றனர். உணவகங்களுக்கு சென்றால் குழந்தைகளின் கையில் மொபைல் போனை கொடுத்துவிட்டால் நிம்மதியாக சாப்பிடலாம் என்று எண்ணுகின்றனர். வீட்டில் வேலை செய்யும்போது குழந்தை வீடியோ கேம் விளையாடினால் தொந்தரவு செய்யாது என்று அனுமதிக்கின்றனர். இவை அனைத்துமே மாற்றப்பட வேண்டியவை.


ஐந்து ஆண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கான வழிமுறைகள்
உடல் செயல்பாடு ஓராண்டுக்கும் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகள், தரையில் தவழ்வது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் உடலை அசைக்கவேண்டும். குறைந்தது அரைமணி நேரம் குப்புற படுத்து விளையாட வேண்டும்.


ஒன்று முதல் இரண்டு வயதுடைய குழந்தைகள், ஒரு நாளில் குறைந்தது மூன்று மணி நேரம் உடலை அசைத்து செயல்பட வேண்டும். எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்களோ அது நல்லது.


மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகளையும் மேற்கூறிய வண்ணம் உடற் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கவேண்டும். எந்த அளவுக்கு அதிகம் செயல்படுகிறார்களோ அது நல்லது.


செயல்படாமல் இருத்தல்:
ஓராண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தள்ளுவண்டிகளில், நாற்காலிகளில், முதுகு, மார்பு பைகளில் உட்கார வைக்கப்படக்கூடாது. மொபைல், டி.வி உள்ளிட்ட மின்ன ணு சாதனங்களின் திரைகளை பார்க்கக்கூடாது. உடல் செயல்பாடுகளில் ஈடுபடாத நேரம் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், உரையாடுதல் நல்லது.


ஒன்று முதல் நான்கு வயதுடைய குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார வைக்கப்படக்கூடாது. ஒரு நாளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக டி.வி. மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளை பார்க்கக்கூடாது. நடமாடாத, விளையாடாத நேரங்களில் கதைகள் கூறுவது நன்று.


உறக்கம்:
பிறந்தது முதல் மூன்று மாத வயதுள்ள பச்சிளங்குழந்தைகள், குட்டித் தூக்கம் உள்பட நாளொன்றுக்கு 14 முதல் 17 மணி நேரம் வரைக்கும் உறங்க வேண்டும்
4 முதல் 11 மாதம் வரையுள்ள பச்சிளங்குழந்தைகள், குட்டித் தூக்கம் உள்பட நாளொன்றுக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.


ஓராண்டு முதல் ஈராண்டு வயதுடைய குழந்தைகள், தினமும் 11 முதல் 14 மணி நேரம் நன்கு உறங்க வேண்டும். குறித்த நேரம் படுத்து எழும்ப வேண்டும்.
மூன்று முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகள் 10 முதல் 13 மணி நேரம் உறங்க வேண்டும்.


மொபைல், டி.வி. ஆகியவற்றை பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும் என்பது மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை: தெரிந்து கொள்ள வேண்டியவை

You'r reading புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு... Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை