ருசியான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம் ..
தேவையான பொருட்கள்
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
2. வெல்லம் - கால் கிலோ
3. கேசரி பவுடர் - 1 சிட்டிகை
4. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
5. ஏலக்காய் - 4 (பொடியாக்கியது)
6. உலர்ந்த திராட்சை - 6
7. முந்திரி பருப்பு - 6
செய்முறை
சர்க்கரைவள்ளிக் கிழங்கை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவைக்கவும். பிறகு தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்விட்டு பொரித்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் போட்டு, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட வேண்டும். கொதித்த வெல்லப்பாகுடன், கிழங்கு விழுது சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய்விட்டு, கேசரி பவுடர், பொரித்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்ப் பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.