தற்போது மழைக்காலம் துவங்கி விட்டது இந்த நேரத்தில் மின்சாதனங்களை கையாளுவதில் கவனமாக இருக்க சில டிப்ஸ்கள்.:

by Balaji, Nov 17, 2020, 12:13 PM IST

வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள்

*எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.

*வீட்டிலுள்ள , பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.

தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

* எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,
வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

* பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொள்வது நல்லது அதன் மூலம் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

* மழைக் காலங்களில் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,
அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில் ஹீட்டர் நீரில் குளிக்கும் போது ஷாக் அடித்து ஒருவர் இறந்து போனது அறிந்திருப்போம்.
தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அவர் பலியானார்.

ஹீட்டருக்கு கொடுக்கக் கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.
அவுட்லெட் ,ஹாட் வாட்டர் டேப் வழியாகத் தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.ELCB எனப்படும் பாதுகாப்பு சாதனம் இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.

தண்ணீருடன் தொடர்புடைய மின் சாதனங்களான வாஷிங் மெஷின்,கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

* இவ்வளவு கவனமாக இருந்தும்,எதிர்பாராதவிதமாக ஷாக் அடிக்க நேர்ந்தால் உதை உதவிக்கு வருபவர் ஒரு கம்பால், பாதிக்கப்பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை நேரடியாகத் தொடவே கூடாது.

பல வருடங்களுக்கு முன்பு,திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் என்ற மகன், மகள், உறவினர்களென்று ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.

இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல்,அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டும்.செருப்பு இதற்கு நல்ல பாதுகாப்பான சாதனம்.அதனால் அவசரத்துக்கு அதைக் கொண்டு அடித்துக் கூட காப்பாற்றலாம்.கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,
இரு முனை அயன்கிளாட் சுவிட்ச்சும்,3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;
ஃப்யூஸ் போடக் கூடாது.நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

செலவைப் பார்க்காமல் ELCB என்ற சாதனத்தை அவசியம் வாங்கி மின் இணைப்புடன் பொருத்த வேண்டும் .

You'r reading தற்போது மழைக்காலம் துவங்கி விட்டது இந்த நேரத்தில் மின்சாதனங்களை கையாளுவதில் கவனமாக இருக்க சில டிப்ஸ்கள்.: Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை