விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை

Sep 11, 2018, 19:45 PM IST

கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியை இதுநாள் வரை யாரும் கொண்டாடியது இல்ல, அப்படி கொண்டாடினாலும் விநாயகர் சதுர்த்தி போல் இருக்காது.

கிராமத்து முறையில் பச்சரிசி மாவினால் கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1 கப்

தண்ணீர் - 1 ½ கப்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

பூரணம் செய்ய:

வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் -2 கப்

ஏலக்காய் பொடி -கால் டீஸ்பூன்

செய்யும் முறை:

மேல் பிடி மாவு செய்ய, ஒரு கப் பச்சரிசையை 6 மணி நேரம் ஊறவைத்து, ஒரு கப் நீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரைக் கப் நீர் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்.

நான்-ஸ்டிக் தவாவில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்து அரிசி மாவு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் மாவு நன்றாக உருண்டு, திரண்டு தவாவில் ஒட்டாமல் வெந்து வரும் வரை கிளறவும்.

வெல்லப்பூரணம் செய்வதற்கு, அடிகணமான வானலியில் சிறிது நீர் உற்றி பொடியாக உள்ள வெல்லத்தை போட்டு வெல்லம் கரையும் வரை கொதிக்கவிட்டு கெட்டியான வெல்ல நீரை தூசி நீக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் துருவல், வடிகட்டிய வெல்ல நீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து வரும் வரை கிளறி வெல்லப் பூரணம் தயாரிக்கவும்.

கொழுக்கட்டை செய்ய :வெல்ல பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தயாரித்த மேல் மாவை நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக்கி கிண்ணங்கள் போல் அதில் சிறு குழி செய்து,அதனுள் வெல்லப் பூரண உருண்டையை வைத்து மூடி கொழுக்கட்டை போல வடிவமைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.சுவையான கொழுக்கட்டை தயார்.

You'r reading விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை