முதுகெலும்பை பலப்படுத்தும் பாத ஹஸ்தா ஆசனம்

by Vijayarevathy N, Sep 20, 2018, 07:19 AM IST

பாத என்றால் பாதம் என்பதையும் ஹஸ்தா என்றால் கைகளையும் குறிப்பதாகும். கைகள் பாதத்தை தொடும்படி செய்தால் இந்த ஆசனத்தை பாத ஹஸ்தா ஆசனம் என்று அழைக்கிறார்கள்.

நேராக நிமிர்ந்து நின்று கொள்ள வேண்டும். அப்போது கால்களை அருகருகே வைத்து, கால்களின் பெருவிரல்களானது ஒன்றையொன்று தொட்டுகொண்டு இருக்குமாறு நிற்க வேண்டும்.

பின்னர் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி மெல்ல மெல்ல முன்னோக்கி வளைய வேண்டும். அப்போது கால் முட்டிகள் மடங்கி விடக்கூடாது. நன்றாக வளைத்து 2 உள்ளங்கைகளையும் கொண்டு கால் விரல் அல்லது அருகே தரையை தொட வேண்டும். தலையை வளைத்து கால் முட்டியின் மீது தொடுமாறு பாத ஹஸ்தா ஆசனத்தை செய்ய வேண்டும்.

முதலில் முடிந்த அளவு குனிந்த இந்த ஆசனத்தை செய்து பயிற்சி எடுக்கலாம். நன்றாக பயிற்சியான பின்பு படத்தில் உள்ளது போன்று முழுமையாக செய்ய வேண்டும். பாத ஹஸ்தா ஆசனப் பயிற்சியானது வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பலமடையச் செய்கிறது. முதுகெலும்பை பலப்படுத்துகிறது. பிறையாசனம், பாத ஹஸ்தா ஆசனம் ஆகியவற்றை மாறி, மாறி செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

You'r reading முதுகெலும்பை பலப்படுத்தும் பாத ஹஸ்தா ஆசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை