நாவில் நீரோடும் புதினா இறால் குழம்பு

இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்

by Vijayarevathy N, Sep 23, 2018, 10:29 AM IST

தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்போது புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போம்!!!

தேவையான பொருட்கள்: 

இறால் - 200 கிராம் 

புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது) 

கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது) 

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 

வெங்காயம் - 2 (நறுக்கியது) 

பூண்டு - 5 பற்கள் 

பச்சை மிளகாய் - 1-2 

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 

மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 

தேங்காய் பால் - 100 மி.லி 

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 

பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். 

இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

You'r reading நாவில் நீரோடும் புதினா இறால் குழம்பு Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை