வாழைப்பூ அடை செய்வது எப்படி?

by Manjula, Sep 24, 2018, 16:28 PM IST

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிட்டால் நல்லது. அந்த வாழைப்பூவை வைத்து வாழைப்பூ அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி - ஒரு கப்
  2. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப்
  3. இஞ்சி - சிறு துண்டு 
  4. பூண்டு - 4 பல்
  5. காய்ந்த மிளகாய் - 6
  6. பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
  7. சிறிய வாழைப்பூ - ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  8. வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  9. துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
  10. எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும்.
  • முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி.
  • இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்

You'r reading வாழைப்பூ அடை செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை