யோகாசனங்கள்:தோல் தசையை வலுவடைய செய்யும் கோமுகாசனம்

தோல் தசையை வலுவடைய செய்யும் கோமுகாசனம்

by Vijayarevathy N, Sep 30, 2018, 09:01 AM IST

தோல்தசைகளுக்கான சிறந்த ஆசனம் இவை. தினமும் செய்யும் போது தோல் தசை வலுவடைந்து உறுதியாகிறது.

செய்முறை

முதலில் விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் மீது அமரவும். முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும்.

வலக்காலை வளைத்து, இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது வலது பக்க முழங்கால், இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது பிருஷ்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும்.

வலது பக்க முழங்கையை மடித்து, கீழ்ப் புறமாக வளைத்து, முதுகுப்புறம் கொண்டுவரவும். இடக்கையை வளைத்துத் தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு செல்லவும். மூச்சை உள்ளிழுத்து கைகளின் விரல்களை ஒற்றை ஒன்று பிடிக்க வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.

இந்தயோகாசன நிலையில்  மூச்சினை நன்றாக இழுத்து விடவும். மூச்சை வெளியில் விட்டு, பிடித்த விரல்களை விட வேண்டும். பின்புறம் கைகளை மெதுவாக எடுத்து முன்புறம் கொண்டு செல்லவும்.

மேலே உள்ள வலக்காலை மெதுவாக நீட்டவும். இடக்காலை நீட்டி ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவும். வலக்காலை முதலில் மடக்கியும் இதனைச் செய்யலாம்.

பலன்கள்

தோல் தசைகள் மற்றும் மரபுக் கூட்டுத் தசைகளை வழுவடையச் செய்கிறது. அயர்வடைந்த கணுக்கால் மூடுத்தசைகள், நுனிக்கால் தசைகளைப் புத்துணர்வு பெறச் செய்கிறது. இது முதுகு வலி மற்றும் தசைகளின் வலிகளை நீக்கும் ஆசனமாகும்.

You'r reading யோகாசனங்கள்:தோல் தசையை வலுவடைய செய்யும் கோமுகாசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை