மெல்லிய இடையழகு பெற திரிக தடாசனம்

by Vijayarevathy N, Oct 4, 2018, 07:41 AM IST

அழகான ஒல்லிக் குச்சியான இடைப் பெற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. தினமும் இத்திரிக தடாசனம் செய்யுங்க, பலனைப் பெறுங்க.

செய்முறை:

முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு அகட்டி நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கைகளைக் கோர்த்து உள்ளங்கை வெளிப் பார்க்கும் படி தலைக்கு மேலே உயர்த்தவும். இப்போது மூச்சை இழுக்கவும்.

பின்னர் மூச்சைவெளிவிட்டு கைகளை மடக்காமல் இடுப்பை இடது பக்கம் வளைக்கவும்.இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும். இதே போல் வலது பக்கம் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.

பிற யோகாசன பயன்கள்

1. பத்மாசனம்

2. பாத ஹஸ்தா ஆசனம்

3. பதங்குஸ்தாசனா

4. மயூராசனம்

5. கோமுகாசனம்

6. பஸ்சிமோத்தாசனம்

7. சஸ்சாங்காசனம்

8. கூர்மாசனம்

9. திரிக தடாசனம்

 

நன்மைகள்:

இந்த ஆசனம் செய்வதால் முதுகு தண்டு வலிமை பெறுகிறது. இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது.. இடுப்பில் உள்ள தேவையற்ற சதை குறைந்து மெல்லிய இடையழகை பெற முடியும்.

You'r reading மெல்லிய இடையழகு பெற திரிக தடாசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை