இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன்படுத்த இப்படி செய்யலாமா?

Advertisement

நம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைப்பது  என்பது கொஞ்சம் கடினம்தான். எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன் முடியலனு நிறைய பேர் சொல்லி இருப்பாங்க. ஆனால் சரியானஉணவு முறைகளை மேற்க்கொள்ளும் போது நாம் எளிதாக சர்க்கரையின் அளவை சமன்நிலைப் படுத்த உதவும். சரி வாங்க பார்க்கலாம் எந்த உணவுகள் சிறந்தது என்று.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து அதிகம்  நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் குளுகோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பாதாமில் காணப்படும் அதிக நார்ச்சத்து, நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக செரிக்க வைக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் அது உதவும்.

இலவங்கப்பட்டை

ஓட்ஸ் அல்லது ஒயின் போன்ற உணவில் இலவங்கப்பட்டையை சேர்க்கும் போது கண்டிப்பாக அவை சுவையாக இருக்காது. ஆனால் இதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சிலோன் இலவங்கப்பட்டை சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க இது சிறந்த உணவாக செயல்படுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸில் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இதிலும் அடங்கியுள்ளது. நார்ச்சத்து உங்கள் உடலின் உறிஞ்சும் வீதத்தை குறைக்கும். இதனால் கார்போஹைட்ரேட் மிக மெதுவாக குளுக்கோஸாக மாறும். கூடுதலாக, ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுகன் இன்சுலின் உணர்ச்சி அளவை மேம்படுத்தும்.

வெந்தயம்

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். டைப் 1 மற்றும் டைப் 2 வகை சர்க்கரை நோய்களை கொண்டவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க இது உதவும். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த விதையில் உள்ள அளவுக்கதிகமான நார்ச்சத்து ஆகும்.

சால்மன்

சால்மன் மீனில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி அதில் உள்ளது.

வைட்டமின் டி குறைபாடு, டைப் 2 வகையிலான சர்க்கரை நோயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அதனால் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் கூட உங்களை இதய நோயில் இருந்து பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பினால் ஏற்படும் வீக்கத்தை குறைய வைக்கும்.

பூண்டு

பூண்டு என்பது பல உடல் நல பயன்களை அளிப்பது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அதனோடு சேர்த்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சினையை போக்கவும் அது உதவும். முயல்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பூண்டு சிறப்பாக உதவுகிறது என்பதை பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ம் சல்ஃபரும் அதிகமாக உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>