யோகாசனங்கள்: நரம்புகள் வலுவடைய ஹலாசனம்

by Vijayarevathy N, Oct 6, 2018, 09:27 AM IST

கணினியில் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்யும் போது முதுகுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அவற்றை தீர்க்க இந்த யோகாசனம் மிகச் சிறந்த நிவாரணி.

செய்முறை:

இந்த ஆசனத்தின் பெயர், நிலத்தை உழும் கலப்பையை குறிக்கும். ஹதயோகத்தின் சிறந்த ஆசனங்களில் ஒன்று. முதலில் விரிப்பில் மல்லாந்து நேர்க்கோடாக படுக்கவும். இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டி, உள்ளங்கைகள் தரையை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.

மூச்சை உள்ளிழுத்து, கால்களை மடக்கி மார்பு அருகே கொண்டு வரவும். உள்ளங்கைகளால் தரையை அழுத்திக் கொண்டு, கால்களை மேலும் தூக்கி (இடுப்பு, பிட்டத்துடன்) முழங்கால்கள் நெற்றியில் படுமாறு கொண்டு செல்லவும். இவ்வாறு தூக்குவதற்கு உதவ, கைகளை முதுகில் வைத்து தாங்கவும்.

மூச்சை விட்டு, கால்களை மேலும் தூக்கி, முகத்தை தாண்டி, கால்களை தரையில் வைக்கவும். கால்களை தரையில் வைத்தவாறே கணுக்கால், கெண்டைக்காலின் முன்புறம், முழங்கால், தொடைகள் முதலியவற்றை கூரையை நோக்கி, தூக்கவும்.

அப்போது முகவாய், மார்பில் அழுந்தியிருக்க வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். மூச்சை வெளியிட்டு, கைகளை தரையில் கொண்டு வந்து, நிதானமாக பழைய நிலைக்கு திரும்பவும்.

இதை மூன்று முறை செய்யலாம். மூன்று தடவைகளுக்கு மேல் செய்யக்கூடாது. உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பு, கீழ்முதுகு பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும.

பலன்கள்:

இந்த ஆசனம் செய்வதால் முதுகெலும்பு நன்கு பலப்படும். நரம்புகள் வலிவடையும். இந்த யோகா செய்யும் போது அடி வயிறு அழுத்தப்படுவதால், ஜீரண சக்தி அதிகரிக்கும். தைராய்டு சுரப்பு ஊக்குவிக்கப்படும்.

பாலியல் கோளாறுகளுக்கான ஆசனங்களில், ஹலாசனம் சிறந்த ஆசனம். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.

You'r reading யோகாசனங்கள்: நரம்புகள் வலுவடைய ஹலாசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை