தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

by Manjula, Oct 8, 2018, 20:58 PM IST

ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

  • பிரியாணி அரிசி - 1
  • டம்ளர் பீன்ஸ்,கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு - தேவைகேற்ப நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 2
  • முந்திரிப் பருப்பு - 20
  • கிராம்பு - 6
  • லவங்கப்பட்டை - 6
  • ஏலக்காய் - 6
  • வெள்ளைப் பூண்டு உரித்தது - 6
  • பல்லு பெரிய தேங்காய் - 1/2
  • மூடி பச்சை மிளகாய் - 2
  • உப்பு தேவையான அளவு

செய்முறை :

முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித்தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

You'r reading தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை