செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி?

Mutton Kola Urundai recipe in Tamil

by Manjula, Oct 18, 2018, 20:07 PM IST

நேற்றுடன் புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில் இன்று ஐப்பசி மாதம் பிறந்துள்ளது அதனால் இனிமேல் நான்வெஜ் சாப்பிட தடை இல்லை,சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • கொத்துக்கறி –750 கிராம்
  • பெரிய வெங்காயம் – 4
  • தேங்காய்த்துருவல் – 3/4 கப்
  • முட்டை – 1
  • பச்சை மிளகாய் – 7
  • பொட்டுக் கடலை –7 ஸ்பூன்
  • கசகசா – 2 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • பட்டை – 1
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு –10 பல்
  • உப்பு , மஞ்சள்தூள் – தேவையான அளவு

செய்முறை:

  1. தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
    வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. குக்கரில் ஒரு கப் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து 15நிமிடம் வேக வைக்கவும்.தண்ணீர் வற்றி வதங்கியதும், அரைத்துக் கொள்ளவும்.
  4. அரைத்து வைத்துள்ள மட்டன்  கறியுடன் முட்டையும் உடைத்து ஊற்றி , அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  5. கடாயில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை போட்டு சிவக்க பொறித்து எடுக்கவும்.

You'r reading செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை