தீபாவளி ஸ்பெஷல் : ஆரோக்கியமான திணை பாயாசம்

Diwali Sweet : Healthy Thinai Payasam

by Vijayarevathy N, Oct 30, 2018, 22:15 PM IST

தீபாவளி அன்று எத்தனையோ விதமான இனிப்பு வகைகள் செய்வோம். கொஞ்சம் வித்தியாசமாக ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாடுவோம். ஆமாங்க திணை பாயாசம் செய்து ஆரோக்கியமாக தீபாவளியை கொண்டாடுங்கள்.

தேவையானவை:

திணை      -     1 கப்

வெல்லம்    -     1 1/2 கப் ( பொடித்தது)

பால்        -         1 கப் ( காய்ச்சியது)

ஏலக்காய்   -      8 வறுக்கவும்

தண்ணீர்    -      1 1/2 கப்

செய்முறை:

ஒரு வாணலியில் திணையைப் போட்டு 5 நிமிடம் வறுக்கவும். பிறகு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துகொள்ள வேண்டும். இவற்றை வெந்த திணையில் ஊற்றி கொதிக்கவிடவும்.

வெல்லம் பச்சை வாசனை போன பின் பாலை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும். திணை பாயாசம் தயார்.

You'r reading தீபாவளி ஸ்பெஷல் : ஆரோக்கியமான திணை பாயாசம் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை