தீபாவளி ஸ்பெஷல் : காரசாரமான மைதா பிஸ்கட்

Diwali Special : Spicy Maida Biscuit

by Vijayarevathy N, Nov 5, 2018, 16:30 PM IST

நாளை தீபாவளிக்கு சுலபமான காரசாரமான மைதா பிஸ்கட் செய்து அசத்துங்க. இந்த ரெசிபி மகாராஷ்டிராவில் இருந்து வந்ததாகும். சரி வாங்க எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

மைதா  -  1/2 கப்

சிவப்பு மிளகாய்  -  1 டேபிள் ஸ்பூன்

உப்பு  -  தேவைக்கேற்ப

எண்ணெய்  -  6 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்  - 8 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை மிதமான மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இப்பொழுது 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

மாவை சரிசமாக பிரித்து எடுத்து பந்து போல் உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.

பூரி பலகையில் வைத்து ரொட்டி மாதிரி தேய்த்து கொள்ளவும்.

இப்பொழுது ரொட்டியை செங்குத்தாக கோடுகளாக வெட்டவும். பிறகு சரிவாக வெட்டி டைமண்ட் வடிவ சிறிய துண்டுகளாக பெறவும்.

அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடுபடுத்த வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு டைமண்ட்டாக ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்க வேண்டும்.

மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.

பிறகு 5 நிமிடங்கள் ஆற வைத்து பரிமாறவும்.

You'r reading தீபாவளி ஸ்பெஷல் : காரசாரமான மைதா பிஸ்கட் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை