சன்டே ஸ்பெஷல் : சுவையான ஆட்டு மூளை பொரியல்

Sunday Special: Delicious Goat Brain Fry

by Vijayarevathy N, Nov 10, 2018, 21:21 PM IST

ஆட்டு மூளையை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. சுவையான முறையில் சமைத்து சாப்பிடும் போது சொல்லவா வேண்டும். மேலும் ஆட்டு மூளையில் பாஸ்பரஸ் அதிகம் காணப்படுவதால் அவை கிட்னியை சுத்தப்படுத்தி நம் உடலை பாதுகாக்கிறது.

சரி, ஆட்டு மூளை பொரியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

ஆட்டு மூளை  -  2.

மிளகாய் தூள்  -  1 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள்  -  1/2 ஸ்பூன்.

பச்சை மிளகாய்  -  1.

கொத்தமல்லி  -  சிறிதளவு.

வெங்காயம்  -  1/2 கப்.

சோம்பு  -  1/2 ஸ்பூன்.

எண்ணெய்  -  தேவையான அளவு.

உப்பு  -  தேவைக்கேற்ப.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

ஆட்டின் மூளையை கழுவுவது நல்லது. அதன்பின் ஒரு கப் தண்ணீர் விட்டு, மூடி போட்டு மூளையை வேக வைக்கவும்.

ஆட்டு மூளையை அப்படியே வாணலியில் விடாமல் அடிக்கடி கிளறி விடுவது நல்லது.இல்லையென்றால் அடி பிடித்துவிடும்.

மூளை நன்றாக வெந்தப்பின் அவற்றை இறக்கி ஆற வைத்து, துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது மிளகாய்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து மெதுவாக குலுக்கி எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், வேக வைத்த மூளையை இதனுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவும்.

மசாலா அனைத்தும் ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி இதழைத் தூவி பரிமாறலாம்.

சன்டே ஸ்பெஷல் சுவையான ஆட்டு மூளை பொரியல் தயார்.

 

You'r reading சன்டே ஸ்பெஷல் : சுவையான ஆட்டு மூளை பொரியல் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை