பிரதமர் மோடிக்கு இன்று வயது 76 வயது. 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி குஜராத்தில் வத்நகரில் பிறந்தார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து பணியாற்றினார். பின்னர், பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்தார். இந்த தருணத்தில், மகாராஸ்டிரத்தைச் சேர்ந்த சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவும் மும்பை தமிழ்மக்களின் பாதுகாவலருமான கேப்டன் தமிழ் செல்வனிடத்தில் மோடி பற்றி பேசினோம். அப்போது, அவர் கூறியதாவது,
''முதலில் என் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக மோடி இருந்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் பிரதமராகவுள்ளார். 63 வயதில் அவர் இந்திய பிரதமராக பதவியேற்றார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் முதல்வர் மற்றும் பிரதமராக இருந்து மோடி சாதனை படைத்துள்ளார். நீண்டகாலமாக இந்திய பிரதமராக இருந்தவர் என்ற பெருமையும் மோடிக்கு உண்டு. அந்த வகையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை( 4,398 நாட்கள் )முடியடித்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தி மொழி பேசாத மாநிலத்தில் பிறந்து, நீண்ட காலமாக பிரதமராக இருந்தவர் என்ற சாதனையையும் மோடி படைத்துள்ளார்.

நேருவுக்குப் பிறகு,தொடர்ந்து மூன்று பொது தேர்தல்களில் வெற்றி பெற்றவர் மோடி. குஜராத்தில் 2002, 2007 ,2012 என மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் 2014,2019,2024 ஆகிய பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரது தலைமையில், மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து சாதித்துள்ளது. மேற்கத்திய நாடுகள், இஸ்லாமிய நாடுகள் விரும்பும் தலைவராகவும் மோடி கருதப்படுகிறார். தற்போதைய உலகத் தலைவர்களின் முக்கியமானவராகவும் பிரபலமாகவும் உள்ளார். சமீபத்தில், பிரிக்ஸ் மாநாட்டையும் வெற்றிக்கரமாக மோடி நடத்திக் காட்டினார். கல்வான் தாக்குதலுக்குப் பிறகு, சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தது, மோடியின் மிகப் பெரிய ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது. எத்தனை வயதானாலும் அவர்தான் இந்தியாவுக்க பிரதமர். இனிமேல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவே முடியாது.
மோடியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 25 ஆண்டுகால பொதுச் சேவையைச் சிறப்பிக்கும் வகையில், செப்டம்பர் 17 முதல் ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' (Seva Sankalp Abhiyan) என்ற பிரச்சாரத்தை எங்கள் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகளில் நாங்கள் ஈடுபடவுள்ளோம். ''
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி என்று கிராமத்தைச் சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் கடந்த 2014ம் ஆண்டு முதல் மும்பை சயான் - கோலிவாடா தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அப்போது, முதல் இவர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












