சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ரியோ நடிக்கும் பட டைட்டில் வெளியானது

rio rajs film titled nenjam undu nermai undu odu raja

by Sakthi, Mar 19, 2019, 08:20 AM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

rio

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ. பின்னர் சீரியல், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என படிப்படியாக உயர்ந்து தற்பொழுது நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்க, பிளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் கார்த்தி படத்தை இயக்குகிறார். ஆர்.ஜே.விக்னேஷ், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் நாயகியாக ஷெரில் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘என் அண்ணன்’படத்தில் வரும் பாடலின் வரியையே படத்தின் தலைப்பாக தேர்ந்தெடுத்திருக்கிறது படக்குழு. தவிர, டைட்டில் அறிவிப்புக்காக வெளியிட்ட டீஸரில் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லரில் விஜய்சேதுபதி வேகமாக பேசும் ஸ்டைலை அப்படியே பயன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிவடைந்து, தற்பொழுது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக செந்தில்குமார், எடிட்டராக ஒலிஃபர் பணியாற்றி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் நண்பன் அருண்காமராஜ் இயக்கிய கனா, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுபோல, சிவாவின் இரண்டாவது தயாரிப்பு, மக்கள் மனதை ஈர்க்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

டைட்டில் டீஸர் லிங்க்: https://youtu.be/2ZikIaCiC3c

You'r reading சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ரியோ நடிக்கும் பட டைட்டில் வெளியானது Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை