தர்பார் படப்பிடிப்பில் இணைந்தார் நயன்தாரா!

nayantara joins today on wards darbar film

by Suganya P, Apr 23, 2019, 00:00 AM IST

ரஜினி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும்  ‘தர்பார்’ பட்டப்படிப்பில் இன்று முதல் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த படத்தில், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸூம், மனைவியாக நயன்தாரா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் ரஜினி இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் 2020 பொங்கலுக்குத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

`ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை' - இலங்கை மக்களுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

You'r reading தர்பார் படப்பிடிப்பில் இணைந்தார் நயன்தாரா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை