கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்!

by Rahini A, Feb 24, 2018, 10:00 AM IST

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தத் திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கபாலி' திரைப்படத்துக்குப் பின்னர் சங்கரின் '2.0' திரைப்படத்தில் பிஸியாகி வந்தார். இந்நிலையில் மிகப் பிரம்மாண்டமாக '2.0' பட வேலைகள் நடந்து வந்த நிலையிலேயே இருக்க, சூப்பர் ஸ்டாரின் அடுத்தப் படத்துக்கான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' உருவானது. வருகிற ஏப்ரல் 27-ம் தேதி 'காலா' ரிலிஸாகும் என ரிலீஸ் தேதியும் வெளியாகிவிட்டது.

இதுவரையில் தயாரிப்புப் பணிகளிலேயே இருக்கும் '2.0' படமும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்தின் அடுத்தத் திரைப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பணியாற்ற உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கான பெயர், இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபாலி-க்குப் பின்னர் ரஜினி அரசியல் சார்ந்தத் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் அதனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலானப் புதிய படமும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

You'r reading கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை