சபரிமலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்- சொல்வது குடிகாரி சர்ச்சை காய்த்ரி ரகுராம்

Do not politicize the Sabarimal affair by handling party flags Gayatri Raguram tweet

by Isaivaani, Jan 4, 2019, 10:46 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்த விவகாரத்தில், போராட்டம் செய்பவர்கள் கட்சி கொடிகளை ஏந்தி இதனை அரசியலாக்க வேண்டாம் என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது முதல் கேரள மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பல பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பிந்து மற்றும் கனக துர்கா என்ற பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பினர்.

இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பல்வேறு அமைப்பினர் அப்பெண்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இரு பெண்கள் ஐயப்பன் சன்னதிக்குள் நுழைந்து தரிசனம் செய்த விவகாரம் ஒவ்வொருவருக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், இந்த விவகாரத்தில் ஒவ்வொருவரும் ஒன்றினைந்து போராட வேண்டும். இதில், கட்சி கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. எந்த கட்சியாக இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading சபரிமலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்- சொல்வது குடிகாரி சர்ச்சை காய்த்ரி ரகுராம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை