காலை வேளையில் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். அந்த வகையில் இன்று நாம் ஆரோக்கியமான ஓட்ஸ் ஊத்தாப்பம் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
சமைக்க தேவையானவை
உப்பு - 1/2 டீஸ்பூன் முட்டைக்கோஸ் எண்ணெய் - 20 மிலி கறிவேப்பிலை தளிராக - 5 இணுக்கு பொடியாக அரிந்த பீன்ஸ் 2., குடைமிளகாய் 1/4 பாகம்., பச்சை மிளகாய் - 1 கொத்துமல்லி - 1 கைப்பிடி தக்காளி - 1 கேரட் - 1 பொடித்த ஓட்ஸ் - 1 கப் பெரிய வெங்காயம் - 1 தோசை மாவு - 1 கப்
உணவு செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை ஒன்றாக கலந்து வைக்கவும்.
தோசை மாவுடன் ஓட்ஸ் பொடியை சிறிது நீரும், உப்பும் சேர்த்துக் கலக்கவும்.தோசைக்கல்லை காயவைத்து ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றவும்.
பின்னர் காய்கறிகளை ஒரு கைப்பிடி எடுத்து ஊத்தப்பத்தின் மேல் தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பிவிடவும்.பொன்னிறமானதும் எடுத்து சுட சுட கொத்துமல்லி, கறிவேப்பிலை சட்னியுடன் பரிமாறவும்.