இந்தியாவில் குழந்தை திருமணம் 50 சதவீதம் குறைந்துள்ளது: யுனிசெப் அறிவிப்பு

Mar 6, 2018, 17:20 PM IST

புதுடெல்லி: இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை திருமணம் அதிகளவில் இருந்தது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இன்னமும் குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக, உலகம் முழுவதும் நடந்த குழந்தை திருமணம் குறித்து யுனிசெப் ஆய்வு நடத்தியது. இதில், கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை கோடி குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பாக, தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் குழந்தை திருமணம் 47 சதவீதமாக இருந்துள்ளது. இது, தற்போது 27 சதவீதமாக குறைந்துள்ளது என யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

You'r reading இந்தியாவில் குழந்தை திருமணம் 50 சதவீதம் குறைந்துள்ளது: யுனிசெப் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை