வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

by Rajkumar, Sep 17, 2018, 19:48 PM IST
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பரப்பில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக் கடலின் கிழக்கு பரப்பில் புயலை உருவாக்கும் வளிமண்டல சுழற்சி உருவாகி வருவதாக அந்த மையத்தின் முன்னெச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய வங்கக்கடலின் வளிமண்டலம் வரை அந்த சுழற்சி பரவியுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் அடுத்த 24 மணிநேரத்தில்
 
மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என அந்த மையம் கூறியுள்ளது. இதனால் கடலோர ஊர்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மத்திய வங்கக் கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த இரு தினங்களில் புதுவையிலும் வட தமிழகத்தின் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் அதே நேரத்தில், மத்திய மற்றும் தெற்கு வங்க கடலிலும், அந்தமான் ஒட்டிய கடல் பரப்பிலும் அலைகள் சீறி பாயும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

You'r reading வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை