விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசு : தெலங்கானா முதல்வர் அறிவுப்பு

by Isaivaani, Jan 2, 2018, 18:53 PM IST

இந்திய நாட்டில் விவசாயம் மெல்ல நசுங்கி வருகிறது. கடன் பிரச்னைகளால் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் புத்தாண்டு பரிசாக விவசாசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அதன்படி இத் திட்டம் நேற்று தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 23 லட்சம் பம்பு செட்டுகளை இலவசமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தை, தெலுங்கானா மாநிலம் மேட்ச்சால் கல்காஜிகிரி மாவட்டம் ஷமீர் பேட்டையில் அம்மாநில மின் விநியோக திட்ட அதிகாரி ரகுமா ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:
மின் பற்றாக்குறை என்ற நிலை மாறி தற்போது மின் தன்னிறைவை எட்டியுள்ளோம் சூரிய மின் சக்தி உற்பத்தியில் நாட்டில் முதல் இடத்தில தெலங்கானா உள்ளது. இதை கொண்டாடும் வகையில் தெலங்கானா முழுவதும் உள்ள விவசாய நில பம்புகள் இயங்கும் வகையில் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

மேலும், இலவச மின் விநியோக திட்டத்திற்காக ரூ.12,316 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 514 துணை மின் நிலையங்கள் மற்றும் 1,724 மின் மாற்றிகள் அமைக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

நாட்டில் சில மாநிலங்களில் இலவச மின்சாரம் சில மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டாலும் அதற்கு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் நாட்டில் முதல் முறையாக 24 மணி நேரமும் இலவச மின்சாரம் என்ற முறையை தெலங்கானா மாநிலம் அமல்படுத்தியுள்ளது.

நாட்டில் தனி நபருக்கு என்று 1200 மின்சார யூனிட்டுகள் நடை முறையில் உள்ளது. ஆனால் தெலங்கானாவில் 24 மணி நேரமும் இலவச மின்சார திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் அது தற்போது தனிநபர் 1505 மின்சார யூனிட்டுகள் என்ற நிலையை எட்டியுள்ளது.

You'r reading விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசு : தெலங்கானா முதல்வர் அறிவுப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை