குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா?

குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா

by Vijayarevathy N, Oct 6, 2018, 18:47 PM IST

காலை எழுந்ததும் குளிச்சிட்டு பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்கிறோம். இயந்திர தனமான வாழ்க்கை. நாம் தினமும் வெறும் தண்ணியில் குளிப்பது மிக நல்லது ஆனால் பழக்கவழக்கத்தினால் சோப்பு போட்டு குளித்தால் தான்,  குளித்தது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சில வீடுகளில் ஒவ்வொருவரும் ஒரு சோப்பை உபயோகப்படுத்துவார்கள் சிலரோ ஒரு சோப்பை அனைவரும் உபயோகிப்பார்கள்.

இதில் எது கெட்டது? நல்லது? என்று பார்ப்போம்.

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும். ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது.

ஒவ்வொருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இவர்கள் சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

You'r reading குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை