விநாயகர் சிலை கரைப்பதில் சிக்கல்,144 தடை உத்தரவு வாங்கிய ஊர்கள்

செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

Sep 14, 2018, 18:53 PM IST

செங்கோட்டை (நெல்லை) மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

நாளை 6 மணி வரை இத்தடை உத்தரவு நீளும் என அம்மாவட்ட ஆட்சி தலைவர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் வழக்கமான பாதையில் ஊர்வலம் நடக்கும் எனவும் இதில் 30 விநாயகர் சிலையும் அமைதியாக கொண்டு சென்று ஆற்றிவ் கரைக்கப்படும் எனவும் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும்மேலூரில் விநாயகர் சதுர்த்தி அன்று 38 விநாயகர் சிலைகள் வண்டிமறிச்சன் கோயில் முன் பிரதிஷ்டை செய்வது வழக்கம்.இதற்கு பள்ளிவாசல் தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி பெற்ற விழாக்குழுவிர் ஆயிரம் பேர் நேற்று இரவு 9.30 மணிக்கு விஸ்வநாத பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

அப்போது இந்த தெருவை சேர்ந்த மக்கள், விநாயகர் சிலையை கொண்டுசெல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பேர் திரண்டனர். இதையடுத்து விநாயகர் சிலை அந்த தெருவுக்கு வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சிலை மீதும், ஊர்வலத்தினர் மீதும் கல், பாட்டில் உள்ளிட்டவற்றை சிலர் வீசி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த ஊர்வலத்தினரும், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் குறைந்த அளவில் பாதுகாப்புக்கு சென்ற காரணத்தால் இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். கல் வீச்சில் அப்பகுதியில் இருந்த கடைகளும் சேதமடைந்தன.  தொடர்ந்து இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். மேலும்  ஊர்வலக் குழுவினரை பாதுகாப்பாக மீட்டு அனுப்பிவைத்தனர். 

விநாயகர் சிலையும் வேனில் பலத்த பாதுகாப்புடன் அதே தெரு வழியாக வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்து தென்காசி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் விரைந்து வந்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வந்தது.

இந்நிலையில் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து  மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading விநாயகர் சிலை கரைப்பதில் சிக்கல்,144 தடை உத்தரவு வாங்கிய ஊர்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை