ட்ரம்ப்புக்கு இந்திய ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் வருதாம்!

by Rahini A, May 17, 2018, 16:05 PM IST

ட்ரம்ப் வருமானப் பட்டியலில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலும் அடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2016-ம் ஆண்டுக்கான வருமான வரிப் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்க அதிபரின் ட்ரம்ப்பின் சொத்து மதிப்பு, அதன் மூலமான வருமான, ட்ரம்ப் பெயரில் உள்ள தொழில்கள், அதன் மூலமான வருமானம் என பல தரப்பிலான வருவாய்கள் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் ட்ரம்ப்புக்கு உள்ள ரியல் எஸ்டேட் தொழில் ஆதாயம் உள்ள சொத்துகள் பட்டியலில் வரும். கொல்கத்தா மற்றும் மும்பையில் ட்ரம்ப்புக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் பிசினஸ் நிறுவனங்கள் உள்ளன.

இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வருமானம் வருகிறதாம். மொத்தமாக கணக்கில் வரும் வருமானமாக ஆதாய சொத்துகளின் வருமானம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் இதர வருமானங்களாக 452 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ட்ரம்ப்புக்கு இந்திய ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் வருதாம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை