ஜி.கே.வாசன் தாயார் மறைவு..! இபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் அஞ்சலி

TMC president Gk vasans mother Kasturi ammal passed away, leaders pay tributes

by Nagaraj, Jun 26, 2019, 14:55 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஜி.கே.மூப்பனார். அவருடைய மனைவியும் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஜி.கே.வாசன் தாயாருமான கஸ்தூரி அம்மாள் 88 வயதில் சென்னையில் இன்று காலமானார்.


அவருடைய இறுதிச்சடங்கு நாளை காலை காலை கும்பகோணம் அருகேயுள்ள சொந்த ஊரான சுந்தரபெருமாள் கோவிலில் நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


கஸ்தூரி அம்மாள் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் முன் கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது உடலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒபன்னீர்செல்வம்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை... தேமுதிக அந்தஸ்து 'அம்பேல்'... தேர்தல் ஆணையம் விறுவிறு நடவடிக்கை

You'r reading ஜி.கே.வாசன் தாயார் மறைவு..! இபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை