ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ஹூண்டாய் நிறுவனம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அதன்படி, ரூ.2000 கோடி முதலீட்டில் பேட்டரியில் இயங்கும் மின்சாரக் கார்களை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஹூண்டாய் ஒப்புக் கொண்டிருந்தது.
இதன்படி, ஹூ்ண்டாய் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியுள்ள கோனா மின்சாரக் கார் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மின்சார கார் பேட்டரியை 7 மணி நேரம் சார்ஜ் செய்தால் அதிக பட்சமாக 600 கி.மீ. வரை ஓட்டலாம். இந்த காரை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதற்காக மொத்தம் ரூ.7000 கோடி வரை ஹூண்டா முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மின்சாரக் கார்கள் அதிகமாக இயக்கப்படும் போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.