முதலாவது நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி

dmk leader stalin pays homage in karunanidhi memorial on first anniversary

by எஸ். எம். கணபதி, Aug 7, 2019, 13:13 PM IST

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். கருணாநிதி முதல் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தி.மு.க. சார்பில் அமைதி சென்னையில் பேரணி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி, வாலாஜா சாலையில் இருந்து தொடங்கியது.

இதில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதே போல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் விவகாரம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

You'r reading முதலாவது நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை