வேலூர் தொகுதியில் 6-வது முன்னணி நிலவரம் : அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 12,673 வாக்கு முன்னிலை

Vellore lok sabha election AC shanmugam leading 6th round result

by Nagaraj, Aug 9, 2019, 11:10 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட தற்போது 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்றார்.. பின்னர் மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2699 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 6வது சுற்று முடிவில் வாக்கு வித்தியாசம் 12,673 ஆக அதிகரித்துள்ளது.

முன்னணி நிலவரம் :

ஏ.சி.சண்முகம் (அதிமுக): 1,52,875

கதிர் ஆனந்த் (திமுக): 1,40, 202

தீபலட்சுமி (நாம் தமிழர்) : 7,729

முதலில் வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்ததால் திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி நிலவியது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 12,673 வாக்கு வித்தியாசத்தில் முன்னேறியுள்ளதால் அவருடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

You'r reading வேலூர் தொகுதியில் 6-வது முன்னணி நிலவரம் : அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 12,673 வாக்கு முன்னிலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை