ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சி, கார்த்தியை கைது செய்ய ஆக. 23 வரை தடை

Delhi court August 23 interim protection arrest PChidambaram Karti Chidambaram

by எஸ். எம். கணபதி, Aug 9, 2019, 12:56 PM IST

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், விதிமுறைகளை மீறி அனுமதி அளித்ததாகவும், இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கிடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.


இது தொடர்பாக, சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரமும், கார்த்தியும் முன்ஜாமீன் கோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் கைது செய்வதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.


இந்நிலையில், சிதம்பரம், கார்த்தி புகார் மனு எதிர்த்து முன் ஜாமீன் மனுக்கள் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது வாதங்கள் முடிவடையாததால், விசாரணையை வரும் 23ம் ேததிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அது வரை இருவரையும் கைது செய்ய தடையை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கில் ஆரம்பக்கட்ட ஆதாரம் உள்ளதா என்பது குறித்து செப்டம்பர் 6ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் ..! காஷ்மீரில் உச்சகட்ட பீதி; பிரதமர் மோடி அவசர ஆலோசனை

You'r reading ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சி, கார்த்தியை கைது செய்ய ஆக. 23 வரை தடை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை