இந்த முறையாவது அண்ணன் சீமான் MLA ஆவாரா…? எக்சிட் போல் என்ன சொல்லுது!

by Ari, Apr 30, 2021, 11:47 AM IST

வடசென்னை பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்டது திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக திமுகவைச் சேர்ந்த சங்கர், அதிமுகவைச் சேர்ந்த கே.குப்பன், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த மோகன், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக சார்பில் சௌந்தரபாண்டியன் மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள். கடந்த 2016ஆம் தேர்தலில் 65.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2016 இல் திமுக வேட்பாளர் கேபிபி சாமி, அதிமுக வேட்பாளர் பால்ராஜ் அவர்களை 4863 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.

நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி நல்ல வாக்குகளைப் பெறக்கூடும், ஆனால் தி.மு.க. தான் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி தேசிய தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்பது போன்ற கருத்துக்கணிப்பு முடிவுகளையே வெளியிட்டுள்ளன. இந்த முறையும் நாம்தமிழர் கட்சி தோல்வியை தழுவும் என தெரிகிறது.

You'r reading இந்த முறையாவது அண்ணன் சீமான் MLA ஆவாரா…? எக்சிட் போல் என்ன சொல்லுது! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை