என்னாகும் 40லட்சம் பேரின் நிலை- இந்தியாவைப் பதறவைக்கும் அசாம் நிலை

Jul 30, 2018, 15:56 PM IST

அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

மக்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது.

முதல் குடியுரிமை வெளியிடப்பட்டு 7 மாதங்கள் கழித்து இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. 1.9 கோடி பேரின் பெயர் முதல் வரைவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டாவது வரைவின் அடிப்படையில் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் கருத்து கேட்டறியப்படும் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இரண்டாவது வரைவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால், ‘முதல் வரைவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளயிடப்பட்டது. அப்போது அமைதியான சூழல் நிலவியது. இறுதிப் பட்டியலின் போதும் அதைப் போன்ற சூழலை காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகபடுத்தப்பட்டுள்ளன.

You'r reading என்னாகும் 40லட்சம் பேரின் நிலை- இந்தியாவைப் பதறவைக்கும் அசாம் நிலை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை