திமுக புகழஞ்சலியா...? பாஜக இகழஞ்சலியா...?- தமிழிசை காட்டம்

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி புகழஞ்சலியை பாஜகவின் இகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan

தமிழக இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம், இளைஞர் அணியின் தேசிய பொதுச்செயலாளர் சவரூப் சவுத்ரி தலைமையில் சென்னையில் நடந்தது. கோவை மாவட்ட எட்டிமடை முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "கர்நாடக மற்றும் ஒரு சில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது, இதில் வாக்குபதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதா..?"

"ஒற்றுமையுடன் இருக்க தலைவர்களுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம் முதலில் அழகிரிக்கு கொடுத்தால் நல்லது. ஸ்டாலின் தற்போது பதற்றத்தில் இருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள் கைது விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

"திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பாஜகவிற்கு எதிரான உரை ஏற்புடையதல்ல. திமுகவுடன் எந்த காலகட்டத்திலும் கூட்டணி என்று சொல்லவில்லை, திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலியாக இல்லாமல் பாஜகவின் இகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டதற்கு கண்டனம்" தெரிவிப்பதாக தமிழிசை கூறியுள்ளார்.